NEET -Thoduvanam

தொடுவானம் 2019 -2020

NEET,JEE போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசும் ,அரசு பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் 416 மையங்களில் பல்வேறு பள்ளி
மாணவ மாணவிகளை இணைத்து அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும்
,பொது விடுமுறை நாட்களிலும் ,கோடை விடுமுறை நாட்களிலும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

தொடுவானம் ஆரம்பிக்கப்பட்ட 2017 – 2018 ஆம் கல்வி ஆண்டு முதல் நம் பள்ளியில் பயிற்சி மையம் ஸ்மார்ட் கிளாஸ் உதவியுடனும் ஆன்லைன் வகுப்புகள் உதவியுடனும் சிறந்த வகையில்
சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது .

இப்பயிற்சியானது மாணவர்கள் நீட் மற்றும் ஜே இ இ போன்ற போட்டி தேர்வுகளுக்கு தங்களைத்
தயாரித்துக் கொள்ள மிகவும் உதவியாக உள்ளது .

இந்த ஆண்டு 2019 – 2020 ஆம் கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெற இயலாத காரணத்தால் இபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் ஆன்லைன் கிளாஸ் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் வகுப்பு முடிந்த பின்பு குறுந் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு தேர்வின்மதிப்பெண்கள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன.
இதை தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை மிக சிறப்பான வகையில் மேற்பார்வை செய்து
வருகிறது .ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஒரு தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டு ,
ஒவ்வொரு நான்கு மாணவர்களுக்கும் தனித்தனியாக மெண்டர்ஸ் வழி  நடத்தி வருகின்றனர்.
மாணவர்களுடைய அனைத்து விவரங்களும் தேர்வு மதிப்பெண் விவரங்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டு தமிழக அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு நீட் தேர்வில் குறிப்பிட்ட சதவீதத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள்MBBS  சேர்வதற்கான வழிவகை தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சி மயமானது தலைமையாசிரியரின் தலைமையின் கீழ் சிறப்பாக வழி நடத்தப்பட்டு வருகிறது. இமயத்தின் பொறுப்பாசிரியராக திரு ம.எட்வின் அலெக்சாண்டர் அவர்களும் கணினி உதவி ஆசிரியராக திரு எஸ் ஆரோக்கிய பால்ராஜ் ஆசிரியர் அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.